ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்துள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீண்டும் போட்டிடும் என ஏற்கனவே திமுக அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் இளங்கோவன் போட்டியிட  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆளுநர் ரவியின் போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டும் எதிர்ப்பு அவருக்கு மிகப்பெரும் பெருமையையும் நல்ல பெயரையும் ஏற்படுத்தி உள்ளது. அதிமுக சேர்ந்து வந்தாலும் சரி, பிரிந்து வந்தாலும் சரி நாங்கள் வெற்றி அடைவோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இடைத்தேர்தலில் இளைஞர் ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். இடைத் தேர்தலில் காங்கிரஸ் வாய்ப்பு அளித்தால் மகன் சஞ்சய் போட்டியிடுவார் என்று தெரிவித்தார்.