ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி அதிமுக அமைப்பு செயலாளர் சி.வி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவு உள்ளது எனவும், இந்த ஓட்டுகளை கள்ள ஓட்டுகளாக பயன்படுத்தக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சி.வி சண்முகம் தொடர்ந்த இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி அமர்வு நாளை விசாரிக்கிறது.