இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் 28,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஹமோஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் இஸ்ரேல் வான்வழி மற்றும் தரை வழியாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன் ஹாசெம் இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஹாசெம் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.