சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான்மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் வாங்கியுள்ளார். அதன்பின்பு ட்விட்டரின் சி.இ.ஓ.வான பாரத் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட பல அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ட்விட்டருக்கான புதிய சி.இ.ஓ பதவி காலியாக இருக்கின்றது. இதற்கான புதிய நபரை தேடும் பணியை எலான் மஸ்க் ஈடுபட்டிருந்தார். அதன்படி அவர் புதிய சி.இ.ஓவை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆனால் அது எலான் மஸ்கின் செல்லப்பிராணியான வளர்ப்பு நாய் பிளாக்கி ஆகும். இந்த பிளாக்கி திட்ட நிறுவனத்தின் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்தும் அதில் சி.இ.ஓ என்று எழுதியபடியும் காணப்படுகின்றது. மேலும் அதன் முன்பாக சில ஆவணங்கள் பரப்பி வைக்கப்பட்டும் உள்ளன. அது மட்டுமல்லாமல் ஆவணங்கள் மேல் பிளாக்கியின் கையெழுத்திற்கு பதிலாக அதன் கால் தடங்களும் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஏதேனும் அவசர இ-மெயில் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு உதவும் வகையில் ட்விட்டர் லோகோவுடன் கூடிய சிறிய லேப்டாப் ஒன்றும் பிளாக்கியின் முன்னால் இருக்கின்றது. இந்த புகைப்படத்தினை வெளியிட்ட பின் “ட்விட்டரின் புதிய சி.இ.ஓவை பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.