தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். விவாகரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், நடிகர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த சோபிதா துலிபாலாவை டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கள் வந்தது. ஆனால் இதற்கு நாக சைதன்யா மற்றும் சோபிதா விளக்கம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் நடிகர் நாகசைதன்யா நடிகை திவ்யன்ஷா கவுசிக் (25) என்பவருடன் தற்போது டேட்டிங்கில் இருப்பதாக புது தகவல் வெளிவந்துள்ளது. இவர் மஜ்லி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சமந்தாவும் நடித்திருந்தார். மேலும் திவ்யன்ஷா கவுசிக் நடிகர் நாக சைதன்யா மீது கிரஷ் இருந்தது உண்மைதான். ஆனால் இருவரும் டேட்டிங் செல்லவில்லை. அதற்கான ஸ்பேஸ் கிடைக்கவில்லை. மேலும் சாதாரணமாக மட்டுமே நாங்கள் இருவரும் பேசிக் கொண்டோம் என்று தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.