விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் புவனேஸ்வர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்படும் தனியார் தொலைக்காட்சியின் பி.சி.ஆர் பிரிவில் இயக்குனராக பணியாற்றி வந்தவர். நேற்று அதிகாலை புவனேஸ்வர் தனது பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அசோக் நகர் காவல் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக வந்த ஆட்டோ ஒன்று மோதியது.

இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் புவனேஸ்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கால் முறிவு ஏற்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.