பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதற்கு, சுய உறுதிமொழி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் வெளியிடும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பு இன்று ஜூன் 18 முதல் விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர ஏஜென்சிகள் https://new.broadcastseva.gov.in மற்றும் https://presscouncil.nic.in ஆகிய இணைய தளங்களில் தேவையான தகவல்களை சமர்ப்பித்து சுயசான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.