தென்மேற்கு பிரான்சில் உள்ள Mont -de-Marsan விமானத்தளத்தில் ராணுவ வீரர்களை ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேசி உள்ளார். அப்போது பிரான்ஸ் இனிவரும் ஆண்டுகளில் ராணுவ செலவினங்களை மூன்றில் ஒரு பங்காக உயர்த்தும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் பெரும் ஆபத்துகளை சமாளிக்க பிரெஞ்சு ராணுவத்தை மாற்றுவதற்கான திட்டங்களை வெளியிட்ட மேக்ரான் திட்டமிட்டபடி 2024 – 2030 வரவு செலவுத் திட்டம் ராணுவத்தை உயர் தீவிர மோதல்களில் சாத்தியக்கூறுக்கு மாற்றியமைக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ட்ரோன்கள் மற்றும் ராணுவ உளவுத்துறையில் பிரான்ஸ் பெரும் அளவில் முதலீடு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேக்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று இருப்பதைப் போல் இல்லாத ஒரு ராணுவம் நாளை நம்மிடம் இருக்கும் எங்களை பாதுகாக்கும் உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் மரியாதையுடன் தேசத்தின் அங்கீகாரமும் நம்பிக்கையும் இருக்கிறது என கூறியுள்ளார்.