தங்கம் வாங்குவதை பலரும் சேமிப்பாக கருகின்றனர் அதிலும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கம் வாங்குவது உதுவும் என்பதற்கு என்று கூட கூறலாம், ஆனால் தங்கத்தின் விலை தங்கம் வாங்கு இருபவர்களுக்கு பெரும் தடையாக இருக்கும் ஆனால் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அவ்வகையில், தங்கம் சவரனுக்கு ₹240 குறைந்துள்ளது. இதன் அடிப்படையில், ஒரு கிராம் தங்கம் ரூபாய் 13,150-க்கும், ஒரு சவரன் ரூபாய் 1,05,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதோடு, வெள்ளியின் விலை எந்தவொரு மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு, ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சத்து 40 ஆயிரம் ஆக உள்ளது. தங்கத்தின் இந்தத் தொடர் விலை சரிவு, இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
