உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் நாம் வைக்கக்கூடிய ஸ்டேட்டஸை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பதை செட்டிங்ஸில் சென்று மாற்றிக் கொள்ள முடியும்.

ஆனால் தற்போது வாட்ஸ் அப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அதில் ஒவ்வொரு முறையும் நாம் செட்டிங்ஸ் சென்று மாற்றத் தேவையில்லை. அதாவது ஸ்டேட்டஸை பகிரும்போதே அது யாருக்கு மட்டும் பகிர வேண்டும் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.