புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் போது செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்படுவதால் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்படுகிறது. இதனால் மீட்பு பணிகளில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையை சரி செய்வதற்கு செயற்கைக்கோள்கள் வழியாக அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சீனாவை சேர்ந்த ஹூவாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது படிப்படியாக பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.