இனி தகுதியற்ற படிப்புக்கு அனுமதிக்க கூடாது…. உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

அரசு வேலைவாய்ப்புக்கு தகுதி உள்ள படிப்புகளை நடத்துவதற்கு மட்டும் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் பல்கலை மானிய குழுவான யுஜிசி அனுமதி உடன் நடத்தப்படும் பட்டப் படிப்புகளுக்கு மாநில உயர்கல்வி துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும். அதன்படி எந்தெந்த படிப்புக்கு அரசு அங்கீகாரம் வழங்குகிறதோ அந்த படிப்புகளை அரசு பணியில் சேர்வதற்கு தகுதியானதாக உயர்கல்வித்துறை அங்கீகரிக்கும்.

இந்த நிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் உயர் கல்வித் துறை சார்பாக புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது அனைத்து பல்கலைகளும் தங்கள் இணைப்பில் உள்ள கல்லூரிகள் நடத்தும் படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியானதா என ஆய்வு செய்ய வேண்டும். தகுதியற்ற படிப்புகளை நடத்தி சிண்டிகேட், செனட் மற்றும் அகாடமி கவுன்சில்களில் அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.