தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நவ.2022ல் தொடங்கி, நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நாளை (பிப்.15) கடைசி நாளாகும்.  இந்நிலையில், ஏற்கனவே, 3 முறை கால அவகாசம் வழங்கப்பட்டதால், இனி கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதனால், நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் உடனே மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துவிடுங்கள்.