மண் பாண்டங்கள் செய்பவர்கள் களிமண்ணை வெட்டி எடுப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2 வருடங்களில் இருந்த நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன்பெற முடியாத  சூழல் இருந்தது. தற்போது இந்த நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் இவற்றை தூர்வாரி, கொள்ளளவை உயர்த்தினால், வரும் மழைக்காலத்தில் அதிக அளவு மழை நீரை சேமிக்க முடியும்.

இவ்வாறு மண்எடுத்து விவசாயப் பயன்பாட்டிற்காக பயன்படுத்திட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் பல வந்த நிலையி வட்டாட்சியர் அலுவலக எளிய முறையில் அனுமதி பெற்று கட்டணம் இல்லாமல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதேபோல நீர்த்தேக்கங்கள் ஏரிகள் கண்மாய்கள், குளங்கள், கால்வாயில் விவசாய பயன்பாட்டிற்கும் மண் எடுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மண் பானை தொழில் செய்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.