பல்வேறு துறைகளில் AI டெக்னாலஜி நுழைந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கூகுள் சர்ச்சில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சோதனை நடைபெற்று வருகின்றது. தற்போது அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் அடுத்த மாதம் மற்ற நாடுகளுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக பயனர்கள் தேடும் கேள்விகளுக்கு AI சுருக்கமான பதிலை முதல் பக்கத்தில் காண்பிக்கும்.