தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதையொட்டி சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் இபாஸ் முறையை அறிமுகப்படுத்திய நிலையில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் இ_பாஸ் தேவை இல்லை என அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது கொடைக்கானலுக்கு செல்லும் உள்ளூர் மக்களும் ஒருமுறை இபாஸ் பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்‌. மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் epass.tnega.org என்ற இணையதளத்தில் இபாஸ் பெற்றுக்கொள்வதோடு இந்த முறை மே 30 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.