தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தின் இயக்குனர் வினித் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜூன் மாதத்தில் ஆவின் நிறுவனம் பண பரிவர்த்தனைகளை எளிதாக்கும் விதமாக மேம்படுத்தப்பட்ட கட்டண நுழைவாயில் முறையை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக சில நுகர்வோர்களுக்கு  இணையதளம் வாயிலாக பால் அட்டை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரி செய்து எல்லா நுகர்வோர்களுக்கும் இணையதளம் மூலமாகவே பால் அட்டை பெறுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.