கேரள மாநிலத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி அன்று தலைமைச் செயலாளர் மற்றும் துணை செயலாளர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க பரிசீலனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் இந்த வருடத்தில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான விடுமுறைகள் கிடைக்கும். மேலும் பல்வேறு அரசு அலுவலகங்களில் சர்பாதிவாளர் நியமனம் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் இது வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.