நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை சீமான் சரமாரியாக விமர்சித்தார். அதாவது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த புதிதிலிருந்து ஆதரவு கொடுத்த சீமான் முதல் மாநாடு முடிந்த பிறகு விமர்சனங்களை குவிக்க ஆரம்பித்து விட்டார். அதாவது தமிழ் தேசியமும் திராவிடமும் தங்களுடைய இரு கண்கள் என்று விஜய் கூறிய நிலையில் இந்த இரண்டும் ஒன்றா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்பிறகு நான் ஒரு குட்டி கதை சொல்பவன் கிடையாது ப்ரோ. What’s Bro it’s very wrong bro. நடுநிலையா.? தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? இந்தப் பக்கம் நில் அல்லது அந்தப் பக்கம்நில். இரண்டுக்கும் நடுவே நின்றால் லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய். இது நடுநிலை அல்ல மிகக் கொடு நிலை என்றார்.
அதோடு தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை தலைவர்களையும் சரமாரியாக விமர்சித்தார். மேலும் தங்களுடைய கொள்கைக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் அவர்கள் தங்களுக்கு எதிரி தான் என்றும். இதில் அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது. கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான் என்று கூறார். மேலும் முன்னதாக விஜய்யை தம்பி என்று கூறிய சீமான் தற்போது அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது அவர் என்னுடைய எதிரியென்று அறிவித்துவிட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.