
இந்தோனேஷியாவின் தலைநகரில் மாஸ்டர் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த லக்ஷ்யா சென் ஜப்பானை சேர்ந்த நிஷிமோட்டோ என்பவருடன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் மோதினார்.
இதில் முதல் செட்டில் ஜப்பானின் நிஷிமோட்டோவும் இரண்டாவது செட்டில் இந்தியாவின் லக்ஷயா சென்னும் வெற்றி பெற்றனர். இதனால் மூன்றாவது செட்டில் யார் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 – 23 என்ற கணக்கில் லக்ஷயா சென் தோல்வியை தழுவினார்.