ஒன்றிய அரசாங்கம் 37-வது பாராளுமன்ற அலுவல் கூட்டத்தை நடைபெற்று நடத்தியது. இந்த கூட்டத்தின் போது ஒன்றிய அரசு இந்தி மொழியை நாட்டின் ஒரே அலுவல் மொழி மற்றும் பயிற்று மொழியாக முடிவு செய்து அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.‌ இந்நிலையில் இந்தி மொழியை அலுவல் மற்றும் பயிற்று மொழியாக மாற்றினால் ஹிந்தி மொழி பேசுபவர்களுக்கு அது சாதகமாக அமைந்து விடும் என்பதாலும், பல மொழிகள்  பேசும் இந்திய நாட்டில் ஹிந்தியை மட்டும் மத்திய அரசாங்கத்தின் வேலைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் நிரந்தர மொழி ஆக்கினால் மற்ற மொழிகள் பேசுபவர்கள் கடுமையான அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்றும் அகில இந்திய கல்வி கமிட்டி உறுப்பினர் கமால் சயின் கூறியுள்ளார்.

அதன் பிறகு ஆங்கில மொழியை முழுமையாக நீக்கிவிட்டு ஹிந்தியை மட்டும் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பிறகு இந்தி மொழியை அலுவல் மற்றும் பயிற்று மொழியாக மாற்றக்கூடாது என்பதை எதிர்க்கும் விதமாக தென்னிந்திய அளவில் அகில இந்திய கல்வி கமிட்டி குழு மொழி பாதுகாப்பு மாநாட்டை நடத்துவதற்கு முடிவு செய்தது. அதன்படி  இந்த மாநாடு இன்று சென்னையில் உள்ள சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தில்நடைபெற்றது.மேலும் இந்தி மொழி மீண்டும் நாட்டில் திணிக்கப் படுவதாகவும், பல்வேறு மொழிகள் பேசும் இந்திய நாட்டில் இந்தி மொழியை மட்டும் திணிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வதாகவும் அகில இந்திய கல்வி கமிட்டி குழு குற்றம் சாட்டியுள்ளதோடு அதற்கு தெரிவித்து மொழி பாதுகாப்பு மாநாடு நடத்தியது கவனம் பெற்றுள்ளது.