மத்திய அரசு சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே துறையின் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய் ரூ. 1,35,387 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் சரக்கு வருவாய் ரூ. 1,17,212 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ. 1,35,387 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் 2022-ம் ஆண்டில் மாதம் முதல் 2023-ஆம் ஆண்டு ஜனவரி வரை 1243.46 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்ட நிலையில், முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 1159.08 மில்லியன் டன் சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 7 சதவீதம் சரக்கு போக்குவரத்து வருவாய் அதிகரித்துள்ளது.