இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் ஆர்மேக்ஸ் ஸ்டார் இந்தியா மீடியா நிறுவனம் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிடும். அந்த வகையில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கான மிகவும் பிரபலமான நடிகர்களின் பட்டியலை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் படி வழக்கம்போல் நடிகர் விஜய் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.
இதனையடுத்து மிகவும் பிரபலமான நடிகர்களில் 2-வது இடத்தில் நடிகர் பிரபாஸும், 3-வது இடத்தில் ஜூனியர் என்டிஆரும், 4-வது இடத்தில் அக்ஷய் குமாரும், 5-வது இடத்தில் அல்லு அர்ஜுனும் இருக்கிறார்கள். இதனையடுத்து 6-வது இடத்தில் கேஜிஎஃப் நாயகன் யஷ்ஷும், 7-வது இடத்தில் நடிகர் அஜித்தும், 8-வது இடத்தில் ஷாருக்கானும், 9-வது இடத்தில் ராம் சரணும் இருக்கிறார்கள். மேலும் 10-வது இடத்தில் நடிகர் மகேஷ்பாபு இருக்கிறார்.
Ormax Stars India Loves: Most popular male film stars in India (Dec 2022) #OrmaxSIL pic.twitter.com/RUbiJ2PUtJ
— Ormax Media (@OrmaxMedia) January 15, 2023