ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் ஆடிய தொடரிலும் சரி ஆஸ்திரேலியாவுடன் ஆடிய தொடரிலும் சரி தோல்வியை தான் சந்தித்தது. இந்த தோல்வி காரணமாக பிசிசிஐ இந்தியா அணிக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில் அணியின் பயிற்சியாளர் பிரிவில் கூடுதலாக சிலரை சேர்ப்பதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி விராட் கோலி கேப்டனாக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட விதிகளை அமல்படுத்துவதற்கும் திட்டமிட்டு யோ யோ சோதனை, உடல் தகுதி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை வீரர்களிடம் மேற்கொள்ள பிசிசியை முடிவெடுத்துள்ளது.