இந்திய நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் எப்படி நுழைவது என யூடியூபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வங்காள தேசத்தை சேர்ந்த youtubeரின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் வங்காளதேசத்தில் உள்ள இந்திய எல்லையான சுனம்கன்ஜ் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இருக்கிறார். அதன் பின் அங்கிருந்து எப்படி பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைவது என்று விளக்குகிறார்.

அதோடு இந்தியாவிற்குள் நுழையும் பாதையை சுட்டிக்காட்டி இதன் வழியாக நுழைந்தால் பிஎஸ்எப் வீரர்களிடம் மாட்டிக் கொள்ள முடியும் என்கிறார். அதோடு சில சுரங்கப் பாதைகளை சுட்டி காண்பித்து இந்த வழியாக சென்றால் ஈசியாக இந்தியாவுக்குள் நுழைந்து விடலாம் என்றும் கூறுகிறார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறிவருகிறார்கள்.