இந்தியாவின் பிரபல ஃபேஷன் டிசைனர் ரோகித் பால். இவருக்கு 63 வயது ஆகும் நிலையில் தற்போது மாரடைப்பின் காரணமாக டெல்லியில் காலமானார். இவர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வந்தார்.
இவர் ஃபேஷன் டிசைனிங் செய்வதற்காக FDCI என்ற அமைப்பை நிறுவினார். இவர் பாலிவுட் சினிமாவில் மட்டுமின்றி ஹாலிவுட் சினிமாவிலும் ஃபேஷன் டிசைனர் ஆக பணியாற்றியுள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு சர்வதேச அளவில் பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.