சில தோல்விகள் வெறும் விளையாட்டின் முடிவுகள் அல்ல; அவை கோடிக்கணக்கான மக்களின் இதயங்கள் நொறுங்கும் சப்தம். 2026 ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்த நொடி, கால்பந்து உலகமே ஒரு கணம் மூச்சுவிட மறந்து உறைந்து போனது.
சுமார் 90 நிமிடங்கள் இரு அணிகளும் இரத்தமும் சதையுமாகப் போராடியும் கோல் எதுவும் விழவில்லை. கூடுதல் நேரத்தில், 105-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஃபெரான் டோரஸ் போட்ட அந்த ஒற்றைக் கோல், அர்ஜென்டினாவின் தொடர்ச்சியான இரண்டாவது உலகக்கோப்பைக் கனவை நசுக்கி எறிந்தது.
போட்டி முடிந்து, நியூ ஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் இருந்து அமைதியாக வெளியேறிய அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, தன் மௌனத்தை உடைத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட அந்த ஒற்றைப் பதிவு, இன்று உலகம் முழுவதிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் நெஞ்சைப் பிளந்து கொண்டிருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் தான் கோப்பையை இழந்து நிற்கும் புகைப்படத்தோடு, தன் இதயத்தின் ஆழத்திலிருந்து மெஸ்ஸி எழுதிய வார்த்தைகள் வெறும் எழுத்துக்கள் அல்ல; அவை ஒரு மகத்தான தலைவனின் இதயத்திலிருந்து வழியும் ரத்தம்!
“உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றதன் வலி மிகவும் ஆழமானது. இந்தக் காயம் ஆறி மறைவதற்கு நிச்சயம் காலம் எடுக்கும். ஆனால், இந்தத் தோல்வியை மட்டுமே நினைத்துக் கொண்டு நாம் கடந்து வந்த பாதையை மறந்துவிட முடியாது. இந்த அணி தொடர் முழுவதும் காட்டிய அசாத்திய வீரம், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்த மாபெரும் சாதனை ஆகியவற்றை நினைத்து நான் என்றும் பெருமை கொள்கிறேன்!”
என்று மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியின் பிடியில் நின்று கொண்டிருந்தாலும், எதிரணியான ஸ்பெயினின் வெற்றியை மனதார வாழ்த்திய மெஸ்ஸியின் பெருந்தன்மை, “ஏன் அவர் உலகிலேயே மிகச்சிறந்த வீரராகக் கொண்டாடப்படுகிறார்?” என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிருபித்துக் காட்டியது.
2022-ல் உலகக்கோப்பையை ஏந்திப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்த அதே மெஸ்ஸி, 2026-ல் துயரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார். ஆனால், இந்தத் தொடர் முழுவதிலும் 39 வயதைக் கடந்த அந்த மனிதன் காட்டிய ஆட்டம், எந்த ஒரு இளைஞனுக்கும் சளைத்தது அல்ல!
யாரும் எதிர்பார்க்காத தருணங்களில் அற்புதங்களை நிகழ்த்தி அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை தோள்களில் சுமந்து வந்த அந்த ராஜாளியின் சிறகுகள், ஸ்பெயினின் இரும்புத் தடுப்புச் சுவரில் பட்டுச் சற்றுப் பலமிழந்தாலும், அவரது வீரம் என்றும் வரலாற்றில் அழியாது.
வெற்றி பெறும்போது கொண்டாடுவதை விட, தோல்வியின் கசப்பான தருணத்தில் தன் நாட்டு மக்களுக்கும் வீரர்களுக்கும் தோள்கொடுத்து, எதிரணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஒரு தலைவனின் மாண்பில்தான் விளையாட்டின் உண்மையான ஆன்மா ஒளிந்திருக்கிறது.
2022-ல் கிரீடம் தழுவிய அதே தலைவன், 2026-ல் கண்ணீர் சிந்தி நிற்கலாம். ஆனால், லியோனல் மெஸ்ஸி என்ற பெயரும், அவர் கால்பந்து மைதானத்திற்குத் தந்த அந்த அற்புதத் தருணங்களும் எந்தக் காலத்திலும், எந்தத் தோல்வியினாலும் அழிக்க முடியாத காவியங்கள்! கோப்பை கைநழுவலாம், ஆனால் மெஸ்ஸி வென்ற இதயங்களின் எண்ணிக்கை என்றும் குறையாது!
View this post on Instagram
“>
