கடலூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றின் முன், ஒரு குடிமகன் மதுவின் தரத்தைப் பற்றி ஆவேசமாக பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில், பச்சை கலர் சிம்பல் இருந்தால்தான் தரமான மது கிடைக்கும் என்று கூறிய அவர், “இது எம்பிசி சரக்கு, டுபாக்கூர் தான்!” என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “எனக்கு மாரடைப்பு வருகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளன. நான் என்ன செய்வது?” என்று புலம்பிய அந்த குடிமகன், விற்பனையாளர்களிடம் மதுவின் தரத்தை கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்துள்ளார்.  குறிப்பாக, “போதை சரியாக ஏறாத சரக்கு, டுபாக்கூர் சரக்கு” என்ற விமர்சனங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன.

அதே நேரத்தில், டாஸ்மாக் விற்பனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றியும் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய், ஆப் பாட்டிலுக்கு 20 ரூபாய், புல் பாட்டிலுக்கு 40 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பலர் கூறி வருகிறார்கள். இதை தடுக்க, டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இந்த பிரச்சனை நீண்ட நாள்களாக நிலைத்து வருவதால், குடிமக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது.