
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தற்போது மக்களை வாட்டி பதித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பல இடங்களிலும் அனல் காற்று வீசுகிறது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பம் கடந்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் கொளுத்தும் வெயிலுக்கு தன்னுடைய தலைமுடியை மின்விசிறி போல பயன்படுத்தி போலீஸ்காரர் ஒருவர் நடந்து செல்கின்றார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பல கமெண்ட்களை பதிவு செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க