ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. இந்நிலையில் பெங்களூர் அணியின்  நட்சத்திர வீரர்  விராட் கோலி எம்.எஸ் தோனி குறித்து போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பேசினார். அவர் பேசியதாவது, ஐபிஎல் போட்டியில் நானும் எம்.எஸ் தோனியும் எதிரெதிரே விளையாடுவது இது கடைசி போட்டியாக கூட இருக்கலாம். எனவே அவருடன் ஒன்றாக விளையாடிய பழைய நினைவுகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

இந்தியாவுக்காக சில அற்புதமான பார்ட்னர்ஷிப்பை நாங்கள் அமைத்துள்ளோம். அவர் ஏன் கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்கிறார் என்ற விமர்சனங்கள் எழுகிறது. ஆனால் அவர் இந்தியாவுக்காக எத்தனை போட்டிகளை சிறப்பாக ஃபினிஷிங் செய்துள்ளார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அவர் பலமுறை போட்டியை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்துள்ளார். அது மறக்க முடியாத நினைவாகும். மேலும் கடைசி வரை நின்றால் போட்டியை தம்மால் வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பது தோனிக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.