அமெரிக்க நாட்டில் கேரி கிறிஸ்டென்சன் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய தோட்டத்தில் மிகப்பெரிய அளவில் பூசணிக்காயை வளர்த்து வருகிறார்.
இந்த வருடம் சுமார் 500 கிலோ எடை கொண்ட பூசணிக்காயை அவர் வளர்த்து வந்த நிலையில் அதன் மூலம் ஒரு படகை உருவாக்கி கொலம்பியா ஆற்றில் அதனை ஓட்டினார். அவர் கின்னஸ் சாதனை முயற்சியாக இதனை செய்தார். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.