தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக சமீபத்தில் தேசிய விருது வென்றார். இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து இட்லி கடை திரைப்படத்தில் நடிக்கிறார். இதேபோன்று தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துவரும் நிலையில் பாலிவுட் சினிமாவிலும் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய பெயரின் பின்னால் இருக்கும் ஜாதி பெயரை மாற்றியதாக அறிவித்தார். அதன்படி நித்தியா மேனன் என்பதற்கு பதிலாக தற்போது நித்யா மெனன் என்று தன் பெயரை மாற்றியுள்ளார். மேலும் இனி என்னுடைய பெயரை நித்யா மேனன் என்று அழைத்தால் அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்றும் என் பெயர் நித்யா மெனன் தான் என்றும் கூறியுள்ளார்.