இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களுக்கும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும், என்னென்ன விதிகள் மாற்றுவது என்பதை போக்குவரத்து துறையே முடிவு செய்கிறது. இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) பெறுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது.

இதுவரை லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகம் சென்று ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும். இனி அதற்கு எந்த தேவையும் இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு ஓட்டுநர் சோதனை நடத்தவும், ஓட்டுநர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.