ஐபிஎல் 2024 30-வது லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்ற நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி அதிக ரன்கள் குவித்த அணி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த போட்டியில் பவுலர்கள் சரியான முறையில் விளையாடவில்லை.

இப்போட்டியில் லாக்கி பெர்குஷன் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் கொடுத்து 52 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதேபோன்று யாஷ் தயாள் 51 ரன்களும், வைசாக் விஜயகுமார் 63 ரன்களும், ரீஸ் டாப்லி 68 ரன்களும் விட்டுக் கொடுத்தனர். ஹைதராபாத் அணியின் வீரர்கள் பேட்டிங் செய்வதை பார்த்து மைதானத்திலேயே விராட் கோலி மனமுடைந்தார். அவர் மைதானத்தில் வீரர்களை திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலி மனமுடைந்து நிற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஆர்சிபி அணியின் பவுலர்களை நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள்.