தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரந்தூரில் பொதுமக்களை சந்திக்க உள்ளார். இதற்காக காவல்துறையினர் இரண்டு இடங்களை ஒதுக்கி உள்ளனர். இரண்டு இடங்களில் எங்கு பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிக கூட்டத்தை கூட்டாமல் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் வர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.