மத்திய அரசின் ஆயுத காவல் படைக்கான காவலர் தேர்வு நாடு முழுவதும் 128 நகரங்களில் வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மார்ச் மாதம் ஏழாம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 48 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தேர்வாளர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒன்றிய அரசின் ஆயுத காவல் படைக்கான காவல் தேர்வு 2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக 13 பிராந்திய மொழிகளில் நடைபெற உள்ளது. அதாவது ஆங்கிலம் மற்றும் இந்தி உட்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.