சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது கணவர் தினேஷ் கார்த்திக் தன்னை தொலைபேசியில் ஆபாசமான செய்திகளை அனுப்பி மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் நடிகை ரச்சிதாவும், தினேஷ் கார்த்திக்கும் ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் ஜோடியாக நடித்தனர். இவர்கள் காதலித்து 2013-ல் திருமணம் செய்து கொண்டனர்.

சிறிது காலத்துக்கு முன் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதனால் இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கணவர் தன்னை ஆபாசமாக பேசி துன்புறுத்துவதாக நடிகை ரச்சிதா போலீசில் புகார் அளித்துள்ளார்.