தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் ஜோதிகா. இவர் கடந்த 2000-ம் வருடம் சூர்யா நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து உள்ளார். இப்போது ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் 2001ல் வெளியான சிட்டிசன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மீனா நடித்து இருப்பார். இந்த படத்தின் இயக்குனர் சரவணன் சுப்பையா, ஜோதிகாவை இக்கதாபாத்திரத்தில் நடிக்க அணுகி இருந்தாராம். எனினும் சில காரணங்களால் ஜோதிகா இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.