பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல டைரக்டர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மோசமான விமர்சனங்கள் ஒரு க்கம் இருந்தாலும், முதல் நாள் மட்டுமே ரூ.140 கோடி வரை வசூல் செய்திருந்தது. இப்படத்தின் பணிகளை கொரோனா லாக்டவுன் நேரத்தில் தான் இயக்குனர் தொடங்கினாராம்.

முதலில் பிரபாஸ் இப்படத்தில் ராமராக நடிக்க முடியாது என கூறி தயக்கம் காட்டி இருக்கிறார். அவர் மறுப்பு தெரிவித்தாலும் பின் ஓம் ராவத் லாக்டவுனில் ஸ்பெஷல் விமானத்தில் மும்பையிலிருந்து ஹைதராபாத் வந்து பிரபாஸை நேரில் சந்தித்து கதையை சொல்லி இருக்கிறார். அதனை தொடர்ந்து தான் பிரபாஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.