இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ள ஜூன் 14 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காலக்கெடு செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு கிடைக்கும் ஓடிபி மூலம் விவரங்களை திருத்தம் செய்ய முடியும்.