கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரத்தில் உதயகுமார் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வக்கீலாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நித்யா வள்ளி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து கிளம்பிய உதயகுமாரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வேண்டிய படுகொலை செய்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது அவர் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அவரை அரிவாளால் அந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியா  நிலையில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும் ஆத்திரத்தில் அவர்கள் அவருடைய ஆணுறுப்பை சிதைத்தும் அறுத்தும் கொடூரமாக கொன்றுள்ளனர். இதனால் அவர் ஏதேனும் பெண் விவகாரத்தினால் கொலை செய்யப்பட்டிருப்பாரோ என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.