கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் ஆகமத்தை பற்றி எதுவும் தெரியாத சத்தியவேல் முருகன் ஆகமத்தை பற்றி தவறான தகவல் பரப்புவதாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் விதிகளை பின்பற்றாமல் நியமிக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  குழுவில் அறநிலை  உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமிக்கப்பட்டதற்கு  தடை விதித்து, வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..