அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் வாகனத்தை தாக்கி கரூர் நகராட்சி கவுன்சிலர் கடத்தப்பட்டதை கண்டிக்கும் அடிப்படையில், அ.தி.மு.க சார்பில் கண்டன பொதுக் கூட்டம் கரூரில் நடந்தது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று உரையாற்றினார். அ.தி.மு.க தொண்டர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அவர்கள் கழகமே கோவில் என இருந்து வருகின்றனர்.

மேலும் செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு CM பதவிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. CM ஸ்டாலின் குடும்பம் செந்தில் பாலாஜியை அவ்வளவு நம்புகிறார்கள். ஆனால் செந்தில் பாலாஜி இவர்கள் அனைவரையும் கீழே தள்ளிவிட்டுவிட்டு  அடுத்த முதல்வர் ஆகிவிடுவார். இதை ஸ்டாலினுக்கு ஒரு எச்சரிக்கையாக கூறுகிறேன்” என தங்கமணி தெரிவித்துள்ளார்.