ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தனது அசாத்திய பேட்டிங் திறமையால் ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளம் சூறாவளி வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இப்போ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி வருதுப்பா!

2025 ஐபிஎல் தொடரிலேயே வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களை மிரள வைத்த இந்த இளம் வீரருக்கு, எதிரணிகளின் வியூகங்கள் மற்றும் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்கு நடுவே இந்த இரண்டாவது சீசன் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால், அனைத்து விமர்சனங்களுக்கும் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் மரண அடி கொடுத்த சூர்யவன்ஷி, நடப்பு சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 776 ரன்களைக் குவித்து ரன் வேட்டை நடத்தியுள்ளார்.

சூர்யவன்ஷியின் இந்த அசுரத்தனமான ஆட்டத்தை அலசி ஆராய்ந்த சச்சின் டெண்டுல்கர் தனது ரெட்டிட் (Reddit) பக்கத்தில், “வைபவ் சூர்யவன்ஷி அடித்த ரன்களையும் தாண்டி போட்டிகளில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்; அவர் களத்திற்கு வருவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே, எதிரணிகள் அவரைப் பற்றி சிந்தித்து பயப்படத் தொடங்கிவிட்டன, அவருக்காகத் தனி வியூகங்களை வகுத்தன,

மேலும் ரசிகர்கள் மைதானத்தில் அவருக்காகக் காத்துக்கிடந்தனர்” என நெஞ்சம் உருகிப் பாராட்டியுள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினே ஒரு இளம் வீரரை இந்த அளவுக்குக் கொண்டாடியிருப்பது, இப்போ கிரிக்கெட் வட்டாரத்தில் செம ஹாட் ட்ரெண்டிங்காக ஓடிக்கிட்டிருக்குது..!