கேரள மாநிலத்தில் உள்ள புனலூர் பகுதியில் நந்தூட்டி என்று ஐந்து வயது குழந்தை பெற்றோருடன் வசித்து வருகிறது. இந்த குழந்தை சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். இன்ஸ்டாகிராமில் சுமார் ‌6 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில் நந்தூட்டி தற்போது ஒப்பனைகள் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் கண்ணுக்கு மை தீட்டி உதட்டுக்கு சாயம் பூசுவது இருக்கிறது. அதன்பிறகு கார்ட்டூன் கதாபாத்திரத்தில் இருப்பது போன்று பாப் கட்டிங் செய்து சிறுமி வீடியோவில் தோன்றுகிறார். பின்னர் தன்னுடைய உதட்டில் லிப்ஸ்டிக் பூசுகிறார். இடையில் தன் தலையை ஆட்டி மழலை மொழியில் அழகாக பேசுகிறார். மேலும் இந்த வீடியோ 5 லட்சத்திற்கு மேல் லைக்ஸ்களை குவித்து மிகவும் வைரலாகி வருகிறது.