சென்னை, கோவை உள்ளிட்ட நீண்ட தூரம் பயணம் செய்யும் பகுதிகளுக்கு அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு நீண்ட தூரம் செல்லும் பொழுது இடையில் உள்ள உணவகங்களில் நிறுத்தி டீ, டிபன் போன்றவற்றை சாப்பிடுவார்கள். இந்நிலையில் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகத்தில்  உள்ள குறை, நிறைகளை தெரிவிக்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு Feedback Link அனுப்பி குறை, நிறையை தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், பயணிகள் தெரிவிக்கும் புகார்களை பரிசீலித்து உணவகங்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.