தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பாக ஊழியர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களிடம் ஆண்டுக்கு 35 லட்சத்திற்கு மேல் PF பிடிக்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் ஆண்டு ஊதியத்தில் 12% PF பிடிக்க 2009ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், மத்திய அரசு கடந்த ஆண்டு 5 லட்சம் வரை மட்டுமே PF பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால், நடப்பு நிதியாண்டில் PF 75 லட்சம் தொட்டிருந்தால், அரசு ஊழியர்களுக்கு 12% PF தொகை பிடிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.