தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தல தளபதி ரசிகர்களிடையே போட்டிகள் என்பது அடிக்கடி நிகழும். குறிப்பாக இருவரின் படங்களும் ஒன்றாக ரிலீசானால் போட்டிக்கு பஞ்சமே இருக்காது. எதிர்பார்ப்பு என்பது மிகுந்த அளவில் இருக்கும். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துள்ள அஜித் துபாயில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொள்ள பயிற்சி ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது கொடுத்துள்ள பேட்டி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது விளையாட்டில் சாதிக்க விரும்புவதாக கூறிய அஜித் ஒரு கார் ரேஸராகவும் அணியின் உரிமையாளராகவும் சாதிக்க விரும்புவதால் இனி விளையாட்டில் முழு கவனம் செலுத்த இருப்பதாக கூறியதோடு இனி 9 மாதங்களுக்கு எந்த படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு முழுமையாக ரேஸில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும் அக்டோபர் மற்றும் மார்ச் மாத காலகட்டங்களில் ஒரு படத்தில் மட்டும் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அஜித்தும் சினிமாவில் இருந்து படிப்படியாக விலகுகிறாரா என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் தல தளபதி ரசிகர்கள் போட்டி போட்டு படங்களை பார்க்கும் நிலையில் தற்போது இருவருமே சினிமாவை விட்டு விலகினால் எப்படி போட்டி போட முடியும். இதன் காரணமாக தளம் மற்றும் தளபதி ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.