அமேசான் குடியரசு தின விற்பனையானது விரைவில் துவங்கவுள்ளது. இதில் ஸ்மார்ட் போன்களுக்கு 40% தள்ளுபடி, டிவிகளுக்கு 65 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் என்பது ஜனவரியில் வரும் அமேசான் தள்ளுபடி விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. நடப்பு ஆண்டு அமேசான் பயனாளர்கள் வருடாந்திர குடியரசு தின விற்பனையின்போது ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், டிவி உபகரணங்கள் மற்றும் பிற பாகங்கள் மீது பெரும் தள்ளுபடியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவர்.

அமேசான் விற்பனை மற்றும் சலுகைகள் பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணி நேரம் முன்பாகவே தொடங்கும் என்பதால், சந்தாதாரர்கள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்த மெகா விற்பனையிலிருந்து பொருட்களை வாங்க முடியும். இந்த வருடம் அமேசான் பயனாளர்கள் வருடாந்திர குடியரசு தின விற்பனையின்போது ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், டிவி உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களுக்கு, வழக்கத்தை விட பெரும் தள்ளுபடி கிடைக்கும்.

வர இருக்கும் விற்பனையின் ஸ்னீக் பீக்கைப் பகிர்ந்துகொண்ட இ-காமர்ஸ் நிறுவனம், மொபைல் போன்களில் 40 சதவீத தள்ளுபடியும், டிவி உபகரணங்களுக்கு 65 சதவீத தள்ளுபடியும், அமேசான் பிராண்டுகளில் 70 சதவீதம் வரை தள்ளுபடியும் மற்றும் பலவற்றையும் உள்ளடக்கும் என தெரிவித்துள்ளது.