மாலை நேரங்களில் பலரும் தேநீருடன் சாப்பிட விருப்பப்படும் ரஸ்கில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள் ஏராளம். ரஸ்கில் இருக்கும் இனிப்பான சுவை வர வைப்பதற்காக அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இதனால் நாள் முழுவதும் அளவான சர்க்கரை சாப்பிடுபவர்கள் கூட இரண்டே ரஸ்க் சாப்பிடுவதால் ரத்த சக்கரை அளவு அதிகமாகும் ஆபத்துக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலான ரஸ்குகள் வெறும் மாவினால் தயாராவதால் அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்துவதுடன் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

தானியங்களில் இருந்து பெறப்படும் மாவினால் செய்யப்படும் ரஸ்கில் உள்ள மல்டிக் அமிலம், இரும்பு, சிங்க், மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. ரஸ்கில் உள்ள குளூட்டன் வகைப் புரதம் எளிதில் செரிமானமாகாமல் பலருக்கும் உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தக் கூடும். இதனால் தொடர்ச்சியாக ரஸ்க் சாப்பிடுவதை வழக்கமாக்குவதை தவிர்க்க வலியுறுத்தும் உணவியல் நிபுணர்கள் ஒயிட் பிரட், ரஸ்குகளுக்கு பதிலாக அதிக நார்சத்துமற்றும் புரதம் உள்ள பொருட்களை சாப்பிட வலியுறுத்துகின்றனர்.